கால் போன பாதை

காரணமோ, நோக்கமோ ஒன்றுமில்லை. போகலாம் என்று திடீரென்று தோன்றியதும் கிளம்பிவிட்டேன். மூன்று மணிநேரப் பேருந்துப் பயணத்தில், எப்போதும்போல் பசுமையின் பல வண்ணங்களைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன். நெல் வயல்களிலேயே எத்தனை வண்ணமாறுதல்கள்! ஃபோட்டோ ஷாப்பில் இத்தனை விதங்களை உருவாக்க முடியாது என்றே தோன்றியது. மிக நுணுக்கமான வண்ண வித்தியாசங்களை அடுத்தடுத்த பாத்திகள் காட்டிக்கொண்டே செல்கின்றன. எப்போதும் பயணம் செய்யும் பறவைகள் என்னைக்காட்டிலும் அதிகம் கவனித்திருக்கும். ஒன்பது வருடங்களுக்குமுன் கடைசியாகச் சென்றிருந்தேன். கண்டிப்பாக கிராமம் இல்லை. நகரமும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட … Continue reading கால் போன பாதை